ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, அரசுப் போக்குவரத்து பேருந்தின் பின்புற சக்கரம் திடீரென விலகி சாலையில் உருண்டு சென்றதால் பயணிகள் பெரும் பதட்டத்துக்கு உள்ளானார்கள்.
ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து கல்புதூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து, முத்துக்கடை ஆட்டோ நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சியான சம்பவம் ஏற்பட்டது.
சக்கரம் விலகியதும், பயணிகள் பயத்தில் அலறிய நிலையில் இருந்தனர். ஆனால் பேருந்து ஓட்டுநர் சுறுசுறுப்பு காட்டி வாகனத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தி நிறுத்தியதால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.
அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று பயணிகள் ஆவேசம் தெரிவித்தனர்.