தமிழகத்தில் 4 நாள் பயணம்: சென்னை வந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தமிழகத்தில் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்னை வந்தடைந்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பகுதியாக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோகன் பாகவத், இன்றிரவு சென்னை வந்துள்ளார்.
சென்னையின் திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், அமைப்பு சார்ந்த உட்கட்டமைப்பு கூட்டங்களிலும் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், நாளை மதியம் 3 மணிக்குப் பிறகு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பல முக்கிய பிரபலங்கள் மோகன் பாகவத்துடன் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.