ஜனவரி 4-ம் தேதி ஈரோட்டில் பாஜக விவசாயிகள் மாநாடு
ஈரோட்டில் வரும் ஜனவரி 4-ம் தேதி பாஜக சார்பில் மாநில அளவிலான விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது என்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாட்டில் மத்திய வேளாண் துறை அமைச்சரை அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பெரிய அளவில் விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்றும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.