திமுக நடவடிக்கை நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தொடர்பான தீர்ப்பை காரணமாகக் கொண்டு நீதிபதி G.R. சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிபதி சுவாமிநாதன் இந்திய இறையாண்மைக்கு எதிரான எந்தத் தீர்ப்பும் வழங்கவில்லை. ஒரே ஒரு தீர்ப்பு அரசுக்கு விருப்பமில்லை என்பதற்காக நீதிபதியை நீக்க முயல்வது, மற்ற நீதிபதிகளுக்கும் மிரட்டலாகும்,” என்று தெரிவித்தார்.
திமுக, INDI கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நீதிபதியை நீக்குவதற்கான கையெழுத்துகளை சேகரித்துவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றி மேல் வெற்றியைப் பெறுவோம் என்றார்.
மேலும், S.I.R. பணியின் காரணமாக 80 லட்சம் முதல் 1 கோடி வரை வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.