வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த மூன்று நாட்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இன்று சென்னையிலும், செங்கல்பட்டிலும், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் (அக். 22, 23) சென்னை மற்றும் வட தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 முதல் 27 வரை தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.