நகராட்சி மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரிக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக சோதனை!
தேனி மாவட்டம் போடியில், திமுக கவுன்சிலர் சங்கருக்கு சொந்தமான இடங்களில் ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
போடி திமுக கவுன்சிலரான சங்கர், ஏலக்காய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருமான வரி அதிகாரிகள் அவரது வீடு மற்றும் கிடங்கில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சங்கரும் அவரது குடும்பத்தினரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காமல் கடந்த 2 நாட்களாக தலைமறைவாக உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி அதிகாரிகள் 3வது நாளாக ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் பணியாளர்கள் உதவியுடன் சங்கரின் வீடு மற்றும் ஏலக்காய் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.