திருப்பரங்குன்றம் பிரச்சினையில் அரசு முழுவதும் தவறே நடந்துள்ளது : நயினார் நாகேந்திரன் தாக்கு
திருப்பரங்குன்றம் விவகாரத்தை, அங்காளி–பங்காளி மோதலாகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் பயன்படுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் முழு நோக்கமும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமே எனவும், திருப்பரங்குன்றம் சம்பவத்தை அதற்காகவே சாதகமாக மாற்றுகிறார் என்றும் கூறினார். பாஜக உறுப்பினர்கள் இஸ்லாமியர்களுடன் மிக நெருக்கமாக பழகி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முழுக்க தவறானது என்றும் அவர் எதிர்த்தார்.
சட்டப்படி தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டியிருந்த நிலையில், அதற்கு பதிலாக 144 தடை உத்தரவை விதித்தது சரியான நடவடிக்கை அல்ல என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
“மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை இந்த விவகாரத்தில் எடுத்த அனைத்து முடிவுகளும் தவறானவை. நீதிமன்ற தீர்ப்பைப் பார்க்கும் பிறகு அடுத்தபடியாக எங்களைச் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்,” என அவர் தெரிவித்தார்