சென்னையில் இருநாள் மிருதங்க கருத்தரங்கம் சிறப்பாக நிறைவு
சென்னையில் மிருதங்கத்தின் செயல்முறை, இயக்கவியல் மற்றும் இசை அணுகுமுறைகளை விளக்கும் வகையில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் “மிருதங்கத்தின் இயக்கவியல்” என்ற மையப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடந்த இந்த கருத்தரங்கம் நான்கு முக்கிய பிரிவுகளாக அமைக்கப்பட்டது. ‘தாள இசை பூங்காவில் நடைபயணம்’, ‘தாள வாத்தியங்களில் மிருதங்கத்தின் பங்கு’, ‘துணை இசையால் கச்சேரியை வளப்படுத்துவது’ மற்றும் ‘மிருதங்கத்தின் எதிர்காலப் பயணம்’ ஆகிய தலைப்புகளில் நிபுணர்கள் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பத்ம விபூஷண் விருது பெற்ற உமையாளப்புரம் சிவராமனும், பத்மபூஷண் ராமசாமியும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர். சிறப்பு இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.