அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்து – ஓட்டுநர் தப்பி ஓட்டம்
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அதிவேகமாக சென்ற ஒரு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாயுள்ளது.
அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே, நோயாளிகள் இல்லாத நிலையில் சென்றுகொண்டிருந்த இந்த ஆம்புலன்ஸ் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வேறு ஒரு கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
மோதலின் தாக்கத்தில் ஆம்புலன்ஸ் முழுவதும் தலைகீழாக புரண்டது. விபத்துக்குப் பிறகு அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மீட்கப்பட்ட நிலையில், தற்போது விபத்துக்கான காரணங்களைப் பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.