அம்பேத்கரின் 69வது நினைவு நாள்: சென்னையில் பாஜக ஏற்பாடு செய்த மரியாதை பேரணி
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்து துறைமுகம் நோக்கி பாஜக சார்பில் சிறப்பு அஞ்சலி பேரணி நடத்தப்பட்டது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான இந்தப் பேரணியில் கரு. நாகராஜன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். அம்பேத்கரின் சேவையை நினைவுகூறும் வகையில், பாராட்டுச் சொற்கள் எழுதிய ஜோதியை ஏந்தி பாஜகவினர் துறைமுகத்தை நோக்கிச் சென்றனர்.
பின்னர் துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி அஞ்சலி நிகழ்வை நிறைவு செய்தனர்.