அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை
சட்ட மேதை, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70வது நினைவு தினத்தையொட்டி சென்னை லோக் பவனில் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு, அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்று, அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தின் முக்கியத்துவம், சமூக நீதிக்கான அவரது பங்களிப்புகள், கல்வி மற்றும் சமத்துவத்திற்கான அவரது விழிப்புணர்வு முயற்சிகள் குறித்தும் நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது.
அரசு அதிகாரிகள், கல்வி துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், அம்பேத்கரின் சமூகப்புரட்சி சிந்தனைகள் இன்றும் நாடு முழுவதும் மக்களைத் தூண்டிவருகின்றன என்பதும் வலியுறுத்தப்பட்டது.