ரயிலில் ‘எலக்ட்ரிக் கெட்டில்’ பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை — ரயில்வே எச்சரிக்கை!
ரயில் பயணத்தின் போது தண்ணீர் கொதிக்கவைக்க பயன்படும் ‘எலக்ட்ரிக் கெட்டில்’ போன்ற மின்சாதனங்களை பயன்படுத்துவது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சில பயணிகள் ரயிலுக்குள் மின்சார கெட்டிலை இணைத்து தேநீர், காபி அல்லது உடனடி நூடுல்ஸ் போன்றவற்றை தயாரிப்பது தொடர்பாக பல முறை புகார்கள் வந்துள்ளன.
அண்மையில் மகாராஷ்டிராவில் ஒரு பெண் பயணி ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ‘கெட்டில்’ மூலம் நூடுல்ஸ் சமைத்து சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, ரயிலில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களில் இவ்வகை மின்சாதனங்களை இணைத்து பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதம் எனவும், இப்படிச் செய்பவர்கள் மீது ₹1000 அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது.