ஆடு வெட்டி பிரியாணி சாப்பிடும்போது எந்த கலவரமும் இல்லை, தீபம் ஏற்றினால் கலவரம் எப்படி?” – இந்து முன்னணி கண்டனம்
தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக வரும் 7 ஆம் தேதி மாநிலமெங்கும் போராட்டம் நடத்தப்படுமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்தார்.
திருப்பூரில் ஊடக பிரதிநிதிகளிடம் பேசுகையில், திருப்பரங்குன்றம் தொடர்பாக திமுக அரசு இருவிதமான அணுகுமுறை கையாளுகிறது என அவர் குற்றஞ்சாட்டினார்.
“ஆடு வெட்டி பிரியாணி சாப்பிடும்போது எந்த கலவரமும் இல்லை; ஆனால் தீபம் ஏற்றினால் கலவரம் வெடிக்குமா? இந்த நாடு மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்துக்களை எளிதில் ஏமாற்றிக் கொண்டு வாக்குகளைப் பெறலாம் என்று அரசு நினைக்கிறது எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்தார்.