ஐயப்ப பக்தரின் உயிரைக் காத்த RPF உதவி ஆய்வாளர்கள் — சேலத்தில் நடந்த அதிரடியான மீட்பு!
சேலம் ரயில் நிலையத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் இருந்து விழப்போகும் நிலையில் இருந்த ஐயப்ப பக்தரை, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) உதவி ஆய்வாளர்கள் துரிதமாக மீட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் சபரிமலைக்கு செல்ல திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் சேலம் நிலையத்தில் நின்றபோது அவர் தண்ணீர் வாங்குவதற்காக இறங்கினார்.
ஆனால் ரயில் மீண்டும் இயக்கம் தொடங்கியதை கண்டு அவசரமாக ஓடி ஏற முயன்றார். அந்த சமயத்தில் சமநிலை தவறி தண்டவாளத்திற்கு அருகில் வழுந்துவிடும் நிலை ஏற்பட்டது.
அந்த இடத்தில் பணியில் இருந்த RPF உதவி ஆய்வாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை பிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.