தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரம்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் முடிவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
வழக்கை விசாரித்த போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை என அரசின் தரப்பு முன்வைத்தது.
அதே நேரத்தில், நாம் மேல்முறையீடு செய்யத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், உயர்நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் சிஐஎஸ்எப் படையினரின் கண்காணிப்பில் மலை உச்சியில்ுள்ள தீபத் தூணில் மனுதாரருக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசு வாதித்தது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, தனி நீதிபதி அனைத்து பக்கங்களுக்கும் வாய்ப்பு வழங்கி நியாயமான விசாரணை மேற்கொண்ட பின்னரே தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் கோவில் நிர்வாகமும் காவல்துறையும் அந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதாகவும் தெரிவித்தது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு வழங்க வேண்டிய நிலை உருவானது அரசு உத்தரவை சரியாக செயல்படுத்தவில்லை என்பதாலேயே என்று குறிப்பிட்டனர்.
மேலும், மாநில அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாத காரணத்தால் சிஐஎஸ்எப் படையினரை பாதுகாப்பு பணிக்காக அனுப்ப உத்தரவிட்டதாகவும், தெளிவில்லாத காரணத்திற்காக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறி அந்த மனுவை நிராகரித்தனர்.