கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை மாட்டுச் சந்தையில் பரபரப்பு விற்பனை
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை சந்தைமேடு மைதானத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தை பெரும் விற்பனையுடன் கூடிய களைகட்டிய சூழலை ஏற்படுத்தியது.
நாட்டு மாடு, காங்கேயம் காளை, ஓங்கோல் காளை, மேலும் குதிரைகளை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் அதிக அளவில் வருகை தந்து ஆர்வம் காட்டினர்.