சென்னை மேடவாக்கம் ஏரியில் overflow ஆன நீர், பள்ளிக்கரணை பகுதிகளை வெள்ளப்படுத்தியது
சென்னை மேடவாக்கம் ஏரியில் overflow ஆன நீர், அருகிலுள்ள பள்ளிக்கரணை குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்களின் சாதாரண வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்த கனமழை காரணமாக மேடவாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய நீர், பள்ளிக்கரணை பகுதியிலுள்ள பல தெருக்களில் சென்று தேங்கி உள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், மழைநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மாநகராட்சியில் மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லாததாலேயே வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இப்பகுதியில் தேங்கிய நீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.