20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ தடையுத்தரவு
கடந்த கல்வியாண்டில் ஐஐடி மாணவர்களுக்கு வழங்கிய வேலை வாய்ப்பு ஆஃபர்களை பின்னர் திரும்பப் பெற்ற 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, வரும் கல்வியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி இறுதியாண்டு மாணவர்களை அதிக ஊதியத்துடன் பணியில் அமர்த்துகின்றன.
ஆனால், கடந்த ஆண்டு சில நிறுவனங்கள் மாணவர்கள் பணியில் சேருவதற்கு முன்பே தங்கள் ஜாப் ஆஃபர்களை ரத்து செய்து, மாணவர்கள் சிக்கலில் சிக்கவைத்தது. இதனால் மாணவர்கள் புதிய வாய்ப்புகளும் இன்றி பாதிக்கப்பட்டனர்.
இதனை கடுமையாக எடுத்துக் கொண்ட ஐஐடிகள், உணர்வு பொறுப்பு இல்லாமல் நியமனங்களை ரத்து செய்த அந்த நிறுவனங்களுக்கு வருங்கால கேம்பஸ் ப்ளேச்மென்ட்களில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.