மதுரை : குப்பைகள் அகற்றப்படாமல் நோய் பரவும் அபாயம் – பக்தர்கள் கவலை
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சுற்றுவட்டாரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால், நோய் தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது என பக்தர்களும் உள்ளூர் மக்களும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் கோயில் பகுதி முழுவதும் பக்தர்கள் திரள்வுடன் காணப்படுகிறது. இதனிடையே கோயில் அருகே தேங்கியுள்ள குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்களுக்கு பெரிய தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.
குப்பைகளை துரிதமாக அகற்றப் பணிகள் மேற்கொள்ளாதது குறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் மக்கள் அதிருப்தி வெளியிட்டு, நோய் தொற்று அபாயம் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.