சைபர் மோசடிகளைத் தடுக்க ஸ்மார்ட்போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ கட்டாய நிறுவல்!
இந்திய சந்தையில் கிடைக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி எனும் பயன்பாடு அழிக்க முடியாத வகையில் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சைபர் தாக்குதல்கள் மற்றும் இணைய குற்றங்கள் தொடர்ந்து உயரும் சூழலில், பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, சைபர் குற்றங்கள், கணக்கு திருட்டு, ஆன்லைன் கபடங்கள் போன்றவற்றை முறியடிப்பதற்காக, இனி சந்தைக்கு வரும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை முன்பே சேர்த்திருக்க வேண்டும் என்று துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.
புதிய மொபைல் தயாரிப்புகளில் இந்த பயன்பாட்டை சேர்க்க தயாரிப்பாளர்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய விற்பனை மாடல்களிலும் இந்த செயலியை புதுப்பித்து சேர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.