மயிலாடுதுறையில் அரசு பள்ளி வளாகம் நீரில் மூழ்கியது – மாணவர்களுக்கு அவசர விடுமுறை
டிட்வா புயலின் தாக்கத்தால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கனமழை பொழிந்தது. தொடர்ச்சியான மழையால் அங்குள்ள நகராட்சி அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் பெருமளவில் தேங்கியது.
நகராட்சியினர் தக்க வேளையில் நீரை வடிகட்டி அகற்றாததால், பள்ளி முழுவதும் தண்ணீர் சூழ்ந்த நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் அவசரமாக விடுமுறை அறிவிக்க வேண்டிய சூழல் உருவானது.
இதனால், பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீண்டும் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.