பள்ளி–கல்லூரி மாணவர்கள் சிரமத்தில்! விடுமுறை அறிவிக்காததால் பரபரப்பு
சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இன்றைய தினத்திற்கு சென்னையில் மிக கனமான மழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனுடன், பல இடங்களில் இடைவிடாத மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்காமை காரணமாக, மாணவர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கனமழை எச்சரிக்கை இருந்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை குறித்து பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதேபோல் சமூக வலைதளங்களிலும் பலர் அரசு முடிவை விமர்சித்து வருகின்றனர்.