நாளை நான்கு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை தொடர்பான வானிலை எச்சரிக்கையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் தற்போது குறைந்த காற்றழுத்தப் பகுதியாய் தளர்ந்திருந்தாலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பொழிவது காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மழை காரணமாகச் சென்னையின் தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் உருவாகி, வீடுகளில் வசிப்பவர்கள் முதல் சாலைப் பயணிகள் வரை பலர் அவதிக்கு உள்ளானனர். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் மழை காரணமாக சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு நிலையம் ரெட் அலர்ட் வெளியிட்டது.
இந்த நிலையில், கனமழை மற்றும் ரெட் அலர்ட் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.