திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி – இந்து முன்னணி சார்பில் கூட்டுப் பிரார்த்தனை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்து முன்னணி உறுப்பினர்கள் ஒருமித்த பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி பெற வேண்டுமெனும் நோக்கில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை, திட்டமிட்டபடி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரளாகக் கூடிய பக்தர்கள், திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள வெயில் உகந்த அம்மன் கோயிலில் வழிபாடு செய்து, முளைப்பாரியுடன் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.