கார்த்திகை தீபத் திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயிலில் 6வது நாள் உற்சவம் கோலாகலமாக
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை 6வது நாளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியிருந்தது.
ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், குடும்ப தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
6வது நாள் உற்சவத்தில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர், தெய்வானை தாயாருடன் வீதியுலாவில் கலந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
அவர்களுக்கு பின், சத்தியகீரீஸ்வரர், பிரியாவிடை அம்மன், கோவர்த்தன அம்பிகை ஆகிய தெய்வங்களும் தனித்தனியான வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.