டிட்வா புயல் தாக்கம் – மயிலாடுதுறை செம்பனார்கோயிலில் 172 மி.மீ மழை அளவு!
வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் விளைவாக, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான கனமழை பெய்தது. இதில், செம்பனார்கோவில் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 172 மில்லி மீட்டர் என அதிகபட்ச மழை பதிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, மங்கநல்லூர் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் மிகுந்த மழை பொழிந்தது. இதன் காரணமாக, மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 117 மில்லி மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்திற்குப் பின்னர் சில பகுதிகளில் இலகு சாரல் தொடர்ந்து பெய்து வருவதோடு, பல இடங்களில் வலுவான தரைக்காற்று தாக்கம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.