திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – மலையேற்றத்துக்கு தடை

Date:

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – மலையேற்றத்துக்கு தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீப நாள் அன்று பக்தர்கள் மலையேறும் செயல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை விழா 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 3ஆம் தேதி அதிகாலை பரணி தீபம், மேலும் அதே நாள் மாலை அண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

ஆனால், டிட்வா புயலின் தாக்கத்தால் மிக கனமழை பெய்யும் என வானிலை துறை வெளியிட்ட ஆரஞ்ச் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, இந்த ஆண்டும் மலையேறுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையேற்ற தடையை மதித்து, நிர்வாகத்திற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மலையேறும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெஞ்சல் புயலின் காரணமாகவும் இதேபோல பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது” – அண்ணாமலை கடும் கண்டனம்!

"திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது" - அண்ணாமலை கடும் கண்டனம்! சென்னை: விமானப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக...

“ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – வெள்ளை மாளிகை அதிரடி அறிக்கை!

"ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - வெள்ளை...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு! திருச்சி: பூலோக...

ராஜோரி: “ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்” ராணுவ வீரர்கள் சார்பில் பிரம்மாண்ட ரத்த தான முகாம்!

ராஜோரி: "ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்" ராணுவ வீரர்கள் சார்பில் பிரம்மாண்ட ரத்த தான...