வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் மழை தொடரும்!
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களாக மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பொழிவு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை (அக்டோபர் 22) விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், அக்டோபர் 23 மற்றும் 24 தேதிகளில் தமிழகமும் புதுச்சேரியும் முழுவதும் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை தொடர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் ஆரம்பமாக அமையும் எனவும் வானிலை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.