கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் விடுவிப்பு
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சாட்சியை மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு உதகை மகளிர் நீதிமன்றம் விடுவிப்பு உத்தரவிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டு, பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தனியார் விடுதி உரிமையாளரும், சாட்சியாளருமான சாந்தியையும் மிரட்டியதாக போலீசார் சயான் மற்றும் மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
உதகை மகளிர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், அரசு தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இருவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி சோழியா உத்தரவிட்டார்.