சென்னைக்கு தென்கிழக்கே 540 கி.மீ தூரத்தில் டிட்வா புயல் மையம்!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ‘டிட்வா’ எனும் புயலாக மாற்றமடைந்து வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புயல் சென்னையின் தென்கிழக்கு திசையில் சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயலின் விளைவாக, கடலில் 8 முதல் 11 அடி உயரம் வரை பெரும் அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீனவர்கள் கரையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களைப் பாதுகாப்பாக உறுதிசெய்யவும் கூறப்பட்டுள்ளது.