“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் – முதல்வர் தலைமையில் 28ம் தேதி
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சிக் கூட்டம் அக்டோபர் 28ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், காலை 9 மணிக்கு ஈசிஆர் சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில் தொடங்குகிறது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,
“மத்திய பாஜக அரசின் முன் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை திமுக தொடங்கவுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுக வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த பயிற்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.