தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை எச்சரிக்கை – ரெட் அலர்ட் அறிவிப்பு!
நாளை திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகுதியாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுடன் ராமநாதபுரத்திலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சென்னையில் நாளை மறுநாள் மிகக் கனமழை பொழியக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனுடன், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 7 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.