தமிழக பாஜகவில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தீவிர தேர்தல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், “தமிழகம் தலைநிமிர் தமிழனின் பயணம்” என்ற முழக்கத்துடன் அவர் மேற்கொண்ட யாத்திரை மதுரை, சிவகங்கை, செங்கல்பட்டு வடக்கு, வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிறைவு பெற்றது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில்,
- மயிலாப்பூர் – கரு. நாகராஜன்
- ஆலந்தூர் – நாராயணன் திருப்பதி
- வேளச்சேரி – அமர்பிரசாத் ரெட்டி
- சேப்பாக்கம் – நதியா சீனிவாசன்
- விளவங்கோடு – விஜயதரணி
- மதுரை தெற்கு – பேரா. ராம் சீனிவாசன்
- பட்டுக்கோட்டை – கருப்பு முருகானந்தம்
- பண்ருட்டி – அஸ்வத்தாமன்
- திருக்கோயிலூர் – ஏ.ஜி. சம்பத்
- தாம்பரம் – கே.டி. ராகவன்
- திருச்செங்கோடு – கே.பி. ராமலிங்கம்
உள்பட, 234 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.