அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாகத் தகவல்கள் உறுதி செய்கின்றன.
செங்கோட்டையன் நேற்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் விஜய்யை நேரில் சந்தித்து, சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் தவெகத்தின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர், செங்கோட்டையன் இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் சேரும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.