திருப்பதி திருமலைக் கோவிலில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆரம்ப மூன்று நாள் தரிசன அனுமதி சீட்டுகளை தேவஸ்தானம் நாளையே பொதுமக்களுக்கு வழங்க உள்ளது.
டிசம்பர் 30ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சிறப்பு வாயிலின் மூலம் இறை தரிசனம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தடுக்கவும், பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய வசதி செய்யவும், ஆரம்ப 3 நாட்களுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியீடு நாளை தொடங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.