நெல்லையில் அரசு பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகல் – மாணவர்கள் சிரமத்தில்
நெல்லை மாவட்டத்தின் பொன்னாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளுக்குள் மழைநீர் ஊறி வருவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இங்கு 2001ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், சில மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்திய மழையால் புதிதாக சீரமைக்கப்பட்ட வகுப்பறைகளுக்குள்ளும் தண்ணீர் சிந்துகிறது. இதனால் மாணவர்கள் பாடம் கேட்டும் அமர்வதிலும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
இதற்கான தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.