சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, பல்லாவரம் தொகுதியில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியின் பல வார்டுகளில் இதுவரை எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படாததால், மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வட்டாட்சியர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் தீர்வு இல்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், தேவையான படிவங்களைப் பெறப் பெரும்பாலும் வாக்குச்சாவடிக்கு நேரில் வரும்படி தொடர்ந்து அழைக்கப்படுவதாக மூத்த குடிமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.