தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் விபர திருத்தப் பணியில், சுமார் 20 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்க முடியாமல் அதிகாரிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இதுவரை 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, அதில் 3 கோடியே 76 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் சுமார் 21 லட்சம் வாக்காளர்களுக்குப் படிவங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் பெரும்பாலான 20 லட்சம் பேர் முகவரி மாற்றியிருப்பதால், அவர்களை நேரில் சந்திக்க அல்லது தொடர்பு கொள்ள முடியாமல் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.