வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையின் படி, ஒரே பட்டாவில் அனைத்து வாரிசுகளுக்கும் பெயர் சேர்ப்பதோடு, ஒவ்வொருவருக்கும் எந்த அளவு சொத்து பங்கு கிடைக்கிறது என்பதையும் தெளிவாக பட்டாவில் குறிப்பிடும் மாற்றம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாரிசுகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு அவரவர் பெறும் பகுதி குறித்து முழு விபரங்களுடன் கூடிய கூட்டு பட்டா வழங்கும் அமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் அனுமதி கிடைத்ததும், இதற்கான செயல்பாடுகள் உடனடியாக தொடங்கப்படும் என வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.