சிறை தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எஸ்ஐஆர் (SIR) படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதை ரத்து செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்பவர், 2021ல் பெங்களூரு செல்லும்போது விமானத்தில் பிடிக்கப்பட்டார். தமிழக கியூ பிரிவு போலீசாரின் கைது நடவடிக்கையால் மேரி பிரான்சிஸ்கா கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மும்பையில் இறந்த ஒரு நபரின் வங்கி கணக்கிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ₹42.28 கோடி பரிமாற முயற்சித்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேரி பிரான்சிஸ்காவை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரிடம் ஓட்டுரிமை இருப்பது தொடர்பான தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியலில் மேரி பிரான்சிஸ்காவின் பெயரை சேர்க்க எஸ்ஐஆர் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.