முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து மனுவிற்கு பதிலளிக்க, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஶ்ரீவஸ்தவா மற்றும் அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை போது, அசோக் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் ஏன் பிறப்பிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமலாக்கத்துறை பதிலளித்ததில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கிய வழக்கில் அசோக் குமார் தொடர்பு உள்ளதாகவும், அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும் ஆஜராகாததால் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ED தனது விளக்கத்தை 3 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.