கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக, திமுகவினர் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி ஆதரவாளர்களை அழைத்து வந்ததால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல மணி நேரம் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கோவை செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் இருந்து திமுகவினர் அரசுப் போக்குவரத்து பேருந்துகளை முற்றிலும் நிரப்பி, விழா நடைபெறும் இடத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதனால், வழக்கமான நேரத்தில் இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் போதாமையால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட சாதாரண பயணிகள் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.