இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது!
இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையில் நிறுத்தப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2030ஆம் ஆண்டுக்குள் இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக அளவு 4 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தப்படும் எனவும், இந்த ஒப்பந்தம் இருதரப்பு முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு, இந்தியா–கனடா உறவில் ஏற்பட்ட பதற்றத்தால், கனடா இத்தகைய வர்த்தக பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.