மழையால் பாதிக்கப்பட்ட சாலையை தாமாக முனைந்து பழுது பார்த்த கிராம மக்கள்!
தருமபுரி மாவட்டத்தின் அரூர் பகுதியில், தொடர்ந்து பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையை தாமே சீரமைத்து, கிராம மக்கள் மீண்டும் போக்குவரத்தை இயல்பாக்கினர்.
அண்மைய பலத்த மழை காரணமாக, கலசப்பாடி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் இடர்பாடுக்கு உள்ளானது.
இதையடுத்து, கிராமத்தினரே ஒன்றிணைந்து பாதைமீது இருந்த மண்மேடுகளை அகற்றி, சாலையை சரிசெய்து, மக்கள் போக்குவரத்து சிரமமின்றி நடைபெறுமாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.