திமுக ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்று பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில், அடிப்படை வசதிகள் வழங்கப்படுமாறு கோரி, வேலூர் இப்ராஹிம் மக்களுடன் இணைந்து ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், அரசு அடிப்படை வசதிகளை வழங்காத நிலையில் இருந்தால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தயாராக இருப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.