காரல் மார்க்ஸியன்களை பின்பற்றுபவர்கள் இந்திய நாகரீகம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதிக்கின்றனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
சென்னையில் கிண்டி பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டாக்டர் எம்.எல். ராஜா எழுதிய கலியுக கல்வெட்டு நூல் வெளியீட்டு விழாவில், ஆர்.என். ரவி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், காரல் மார்க்ஸ் இந்தியாவிற்கு ஒரே நபர் ஆட்சி தேவையெனக் கூறியதை எடுத்துக்காட்டினார். மேலும், சுதந்திரம் பெற்ற பிறகும் மார்க்ஸியர்களின் கொள்கைகள் நம் நாட்டின் நாகரீக மற்றும் கலாச்சார அடையாளத்தை அழிக்க முயற்சிக்கின்றன என அவர் விமர்சித்தார்.