வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் பகுதியில் உள்ள நெல்லூர்பேட்டை பெரியக் குளத்தில் தொடர்ச்சியாக மாமிச எச்சங்கள் கொட்டப்படுவதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுமார் 400 ஏக்கர் விரிப்பில் அமைந்துள்ள இந்தக் குளம், 25-க்கும் அதிகமான கிராமங்களின் மக்களுக்கு முக்கியமான நீர்வழி ஆதாரமாக உள்ளது.
ஆனால், சமீப நாட்களாக சிலர் இந்தக் குளத்தில் மாமிச எச்சங்கள் மற்றும் பல்வேறு குப்பைகளை தூக்கி எறிந்து வருகின்றனர். இதைத் தடுத்து, தவறுக்கு பொறுப்பானவர்களிடம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குளத்தை சுத்தம் செய்து பராமரித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.