டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட தங்கக் கைநாளிகை, ஏலத்தில் சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதிக்கு விற்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டைட்டானிக் பயணிகளின் தனிப்பட்ட பொருட்கள் பல ஆண்டுகளாகக் காலக்காலமாக சர்வதேச ஏலங்களில் வெளிவந்து வருகின்றன. அவற்றில், அமெரிக்க வணிகரான இசிடோர் ஸ்ட்ராஸ் பயன்படுத்திய தங்கக் கடிகாரம் இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் ஏலத்திற்கு வைக்கப்பட்டது.
இந்த அரிய கடிகாரம் மிக உயர்ந்த மதிப்பில் விற்கப்பட்டு, டைட்டானிக் சம்பந்தப்பட்ட நினைவுப்பொருட்களில் இதுவரை ஏலத்தில் கிடைத்த மிகப்பெரிய தொகை என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.