அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் மோதியதில் சேதமடைந்த மெக்சிகோ கடற்படை பயிற்சி கப்பல் ‘குவாஹ்டெமோக்’, சீரமைப்பு பணிகள் முடிந்து தாயகத்திற்குத் திரும்பியுள்ளது.
கடந்த மே மாதத்தில், இந்த பயிற்சி கப்பல் நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தின் கீழ் சென்றபோது நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் காயமடைந்தனர். சம்பவத்திற்குப் பிறகு கப்பலை பழுது பார்த்து மீண்டும் செயல்பாட்டுக்குத் தயாராக்கும் பணிகளில் மெக்சிகோ கடற்படை ஈடுபட்டது.
சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு சீரமைப்பு நிறைவடைந்ததால், குவாஹ்டெமோக் மீண்டும் மெக்சிகோவின் துறைமுகத்தை சென்று சேர்ந்தது.
கப்பல் தாயக நிலத்துக்கு மீண்டும்வந்த போது, அந்நாட்டின் கடற்படை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதை வரவேற்றனர்.