தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ (ESI) மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி, அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோருக்கு கடும் அவதியாகியுள்ளது.
மருத்துவமனைக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு கூட எளிதில் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் தண்ணீரை கடந்துவந்தும், சிலர் வேறு வழிகளைத் தேடியும் மருத்துவ சேவைகளை அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை பம்ப் மூலம் வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.